இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் தோட்ட பகுதியில் கழிவுநீர் தொட்டியமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது முதலில் இரண்டு கருப்பு நிறபெட்டிகள் இருந்தன.
இதை பார்த்த எடிசன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறை அந்த பெட்டியை ஆய்வு செய்த போது அதில் ஏகே.47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், நாட்டு வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், பைபர் படகு உதிரிபாகங்கள் ஆகியவை அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் விடுதலை புலிகள் இலங்கை உள்நாட்டு போரில் ஈடுபட்டபோது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையிலான காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.அதிகளவில் தோட்டாக்களும், வெடிகுண்டு பொருட்களும் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.