Skip to main content

வாகன சோதனையில் சிக்கிய மயில் வேட்டைக்காரர்கள்

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

three arrested in kallakurichi in peacock case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான ஏராளமான காப்பு காடுகள் உள்ளன. இதில், மரூர் என்ற கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் கள்ளக்குறிச்சி வனவர் முருகன் தலைமையில் வனக் காப்பாளர்கள் சதீஷ்குமார், ராம்குமார், சரவணகுமார் ஆகிய அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

 

அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை வழிமறித்து சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் சோதனை செய்தனர். அவர்களிடம் வேட்டையாடப்பட்ட மூன்று மயில்கள் இருந்துள்ளது. மருர் கிராம வனக்காட்டு பகுதியில் இதை வேட்டையாடியதாக மூவரும் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கியுடன் சென்று மயில் வேட்டையாடிய மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் ராஜ், பிரவீன் குமார், பகண்டை கிராமத்தைச் சேர்ந்த அருள் ஆனந்தராஜ் ஆகிய மூவரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 


அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூன்று பேரையும் வனவிலங்குகளை வேட்டையாடிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்