Skip to main content

தமிழக கோயில்கள் வரலாறுகள் தொகுக்கப்படுகின்றன: அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன்

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
se

 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகம் இணைந்து திருவண்ணாமலை நகரில் தொல்லியல் கழகத்தின் 28வது ஆண்டு விழாவினை ஜீலை 21 மற்றும் 22ந்தேதி நடத்தியது. இந்த நிகழ்வில் கல்வெட்டுகள் தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள், பழங்கால நாணயங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்தவை பார்வைக்கு வைக்கப்பட்டுயிருந்தன.


இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், தமிழகத்தில் உள்ள கோயில்களின் வரலாறுகள் தொகுக்கும் பணி நடைபெற்றுவருகின்றன. வரலாறுகள் தொகுக்கப்பட்டதும், அதை புத்தகமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதோடு, மாவட்டத்தில் அருங்காட்சியகம் வரைவில் அமைக்க அரசு முடிவுசெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.


இந்த இரண்டு நாள் நிகழ்வில் கருத்தரங்கம், கட்டுரை சமர்பித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் மொழியில் அறிஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவ – மாணவிகள், கவிஞர்கள் என 500க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

சார்ந்த செய்திகள்