தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.. கொலையாளிகளை கண்டு பிடிக்க தஞ்சை எஸ்பி மகேஷ்வரன், அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில்திருபுவனத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். போலிசார் தொடர் விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் திருச்சியில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்கு நகர்ந்துள்ள நிலையில்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை செய்து வருகிறது.
ஏடிஎஸ்பி சவுக்கத் அலி தலைமையில் தஞ்சை. கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை செய்தனர். இன்று என்ஐஏ அதிகாரிகள் திருச்சி பாலக்கரையில் உள்ள திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு வந்தனர்.
மூன்றாவது மாடியில் அமைந்துள்லி அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விசாரணை திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.