![Thiruvasi accident six passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/qi-qqcmx3w4ZPh_Az77vv7rqcN2sYLJlDpl5XkYtmI0/1679309793/sites/default/files/inline-images/th_3783.jpg)
சேலம் மாவட்டம், எடப்பாடியிலிருந்து திருச்சி வழியாக கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்துள்ளனர். இதேபோன்று மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சியிலிருந்து கரூர் நோக்கி ஒரு லாரி சென்றிருக்கிறது.
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து திருவாசி அருகே அதிகாலை 3.50 மணிக்கு எடப்பாடியிலிருந்து வந்த ஓம்னி வேனும் லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை, ஒரு பெண், 4 ஆண்கள் என ஆறு பேர் பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 6 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்தினால் திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டருக்கு மேலாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.