திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் இன்று (அக்டோபர் 22ந் தேதி) மாலை 4.30 மணிக்கு நடைப்பெற்றது.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, எஸ்.பி சிபி.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தீபத்திருவிழாவுக்கு காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து துறைகள் என்ன என்ன பணிகள் செய்யவுள்ளது குறித்து எடுத்துக்கூறினர்.
அதிகாரிகள் கலந்துக்கொண்ட இந்த கூட்டத்தில் பெரும்பாலான துறைகளின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ளவில்லை. துறையின் உயர் அதிகாரிகள் தாங்கள் வந்து கலந்துக்கொள்ளாமல் இளநிலை அதிகாரிகளை அனுப்பி வைத்திருந்தனர். தமிழகத்தின் முக்கிய விழாவன இந்த ஆலோசனை கூட்டத்துக்கே அதிகாரிகள் வரவில்லையென்றால் இவர்கள் தீபத்திருவிழாவுக்கும், வருகை தரும் பக்தர்களுக்கு என்னமாதிரியான ஏற்பாடுகளை செய்து தருவார்கள் என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.