Skip to main content

விருத்தாசலத்தில் 25,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

Published on 12/10/2018 | Edited on 12/10/2018

 

kutka

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து வணிகத்துறை அதிகாரிகள் திடீரென  ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வில் கடைகளில் உள்ள கூல்டிரிங்ஸ்,  காலாவதியான பொருட்கள்,  அதிக கலர் பவுடர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை  பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

 

மேலும் பேருந்து  நிலையம் அருகில் உள்ள பெட்டிகடையில் பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட 30 கிலோ எடை கொண்ட போதை பொருட்களும், ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள கடையில் 5 கிலோ கொண்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 25,000 ரூபாய் இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்த திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

சமோசாவில் கருத்தடை சாதனம்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Shocking information that came out on A contraceptive device in a samosa;t!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் பிம்பரி - சின்ச்வாட் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்கப்படும் சமோசா மிகவும் பிரசித்தி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (08-04-24) இந்த கேண்டீனில் விற்கப்பட்ட சமோசாவில் மாட்டிறைச்சி, கருத்தடை சாதனம், கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் கலந்து விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக அந்த கேண்டீனுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், போலீசாருக்கு கிடைத்த தகவல் உண்மை என கண்டறியப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த சமோசாக்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மற்றும் மசார் ஷேக் ஆகியோரின் எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ், அந்தத் தனியார் நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தத்தை வைத்திருந்தது. இந்த நிலையில், எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ் வழங்கிய சிற்றுண்டியில் ஒரு முறை பேண்டேஜ் இருந்ததால் இவர்களின் ஒப்பந்தத்தை, அந்தத் தனியார் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னர், அந்த நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸின் நிறுவனர்களான ரஹீம் ஷேக், அசோர் ஷேக் மற்றும் மசார் ஷேக் ஆகியோர், மனோகர் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை அழைத்து, சமோசாவில் கருத்தடை சாதனம், குட்கா, மாட்டிறைச்சி, புகையிலை போன்ற பொருட்களை அடைத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்ட மனோகர் எண்டர்பிரைசஸின் ஊழியர்களான ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர், சமோசாவில் அந்த பொருட்களை அடைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மசார் ஷேக், ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மளிகை கடைகளில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

2 people were arrested for selling tobacco products in grocery stores

 

ஈரோட்டில் மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஈரோடு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு பூந்துறை ரோடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த மாளிகை கடையில் சோதனையில் ஈடுபட்ட போது 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் ஈரோடு செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சசிமலர் (40) என்பவரை கைது செய்தனர். இதைப்போல் ஈரோடு வெள்ளாளபாளையம் பகுதியில் போலீசார் ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையிலும் 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். கடையின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (30)  என்பவரை கைது செய்தனர். இரண்டு கடைகளில் இருந்தும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.