நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் விருப்ப மனுவை வைத்து கனிமொழி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அவர் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
இதுவரை தேர்தலை சந்திக்காமல், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார் கனிமொழி. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக தகவல். இந்நிலையில் கனிமொழியும் போட்டியிட உள்ளதால் தூத்துக்குடி தொகுதி விறுவிறுப்படைந்துள்ளது.