Skip to main content

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் (படங்கள்) 

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று (07.03.2023) இந்திய ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களான எஸ்பிஐ வங்கி, எல்ஐசி, தபால் நிலையம், இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் காணப்படும் வட இந்தியர்களின் ஆதிக்கத்தை கண்டித்து சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இதனால் சாஸ்திரி பவன் முன்பு ஏராளமான காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்