Skip to main content

ஆதீனகர்த்தர்களின் ஆலோசனையைப் பெற்று கோயில்களைத் திறக்க வேண்டும்; ஆன்மீக பேரவை வேண்டுகோள்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

mayiladuthurai aanmega peravai


ஆதீனங்களைக் கலந்தாலோசித்து மீண்டும் கோயில்களைத் திறக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
 


இதுகுறித்து மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் கூறுகையில், "கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் நல்ல நோக்கத்தில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பல கட்டங்களைத் தாண்டிய நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவுக்கு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜூன் எட்டாம் தேதி முதல் கோயில்களைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. 

ஆனால் மாநில அரசு தமிழகத் திருக்கோயில்களை திறப்பதற்கும், பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் அனுமதிக்கவில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா புதுவை போன்ற மாநிலங்களில் கோயில்கள் திறப்பதற்கும், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் கரோனா வைரஸ் தொற்று பரவும் தீவிரத்தைக் காரனம் காட்டி மறுத்து விட்டது. 
 

kovil


விமானம் முதல் டாஸ்மாக் கடைகள் வரை திறந்து விட்ட தமிழக அரசு, கோயில்களை மட்டும் திறக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கோயில்களைத் திறப்பது சம்பந்தமாக தமிழக அரசு அண்மையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருக்கோயில்களை நிர்வகிக்கக் கூடிய மடங்களுக்கு உரிய அழைப்பில்லை. ஆனால் கோயில்களே இல்லாத மத நிறுவனங்களின் நிர்வாகங்களை எல்லாம் அழைத்து தமிழக அரசு கலந்தாலோசித்து விட்டு, கோயிலைத் திறப்பதற்கு மறுத்துள்ளது.
 


இதை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில்கள் என்றாலே திருமடங்கள்தான். மடங்களுடைய ஆலோசனை இல்லாமல், தமிழக அரசின் அறநிலை துறை எந்தச் செயலையும் செய்ய இயலாது, செய்யக்கூடாது. உடனடியாக தமிழக அரசு தமிழகத்திலுள்ள பெருமைமிகு சைவ ஆதீனங்களான திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, வேளாக்குறிச்சி போன்ற முதன்மையான ஆதீனங்களின் ஆதீன கர்த்தர்கள் மற்றும் வைஷ்ணவ மட ஜீயர்களையும், மடங்கள் இருக்கக்கூடிய மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்கள் மூலமாக அந்தந்த குருமகா சன்னிதானங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேரடியாகச் சந்தித்து ஆலோசனையைப் பெற்று அந்த ஆலோசனைப்படி உடனடியாக தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை திறப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கரோனா  வைரஸ் தொற்று தாக்கம் குறைய வேண்டுமென்றால் இறைவனுடைய அனுக்கிரகம் தேவை. இறைவனுடைய முழு அனுகிரகம் தேவை என்றால் இறை வழிபாட்டின் மூலம் அது  கிடைக்கும். அந்த இறை வழிபாடு திருக்கோயில்கள் திறக்கப்பட்டால் தான் இயலும். ஆகையினால் மடாதிபதிகளின் ஆலோசனையைப் பெற்று தமிழக அரசு உடனடியாக பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பக்தர்கள் வழிபடுவதற்கு ஏதுவாக திருக்கோயில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியில் பக்தர்கள் முகக் கவசத்துடன்  இரண்டு மீட்டர் இடைவெளியில் இறைவனைத் தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
 

http://onelink.to/nknapp


இறைவழிபாடு இல்லாமல் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் குறைக்க இயலாது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக திருமடங்கள் உள்ள இடங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களை அந்தந்த குருமகாசன்னிதானங்களைச் சந்தித்து அவர்களுடைய அருளாசியைப் பெற்று ஆலோசனையையும் பெற்று கோவில்களைத் திறக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.