பரப்பரப்பான தேசிய நெடுஞ்சாலை அருகில், போதையில் நின்று வாளால் கஞ்சா கேக் வெட்டி, கஞ்சா விற்பனை செய்த 10 இளைஞர்களை போலீசார் கைது செய்ததோடு மட்டுமில்லாமல், அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை 7மணியளவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட தல்லாகுளம் முனியாண்டி கோவில் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக மிகுந்த போதையில், வாளால் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர் எனும் தகவலையடுத்து மானாமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணன் தலைமையிலான போலீஸ் டீம் மதுரை டூ ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள அவ்விடத்தை சுற்றி வளைத்து பத்து இளைஞர்களை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் கேக்கில் கஞ்சா கலந்து சாப்பிட்டதும், தனியாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்த 1100 கிராம் கஞ்சாவும், கடத்தல் விற்பனைக்கு உதவிய சைலோ வகை காரினையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.