Skip to main content

கல்விக்கொள்கை வரைவு அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்... மாணவர்கள் கைது!!! 

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமையன்று நடத்திய போராட்டத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். 
 

pudukottai



ஒரே தேசம், ஒரே மொழி, ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிருத்தி இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையிலும், ஏழை மாணவர்களின், பெண்களின் கல்வி உரிமையை காவுவாங்கும் விதத்திலும் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை உள்ளதால் கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல இந்திய மாணவர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நித்திஸ், சந்தோஷ், அகத்தியன், ராஜி, கார்த்திகா உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்