Skip to main content

ஒருவர் தினம்தோறும் மது பாட்டில் வாங்க அனுமதியில்லை! -கூடுதல் நிபந்தனைகள் விதித்த உயர் நீதிமன்றம்!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

 Tasmac open issue -Highcourt

 

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அரசு விதித்துள்ள நிபந்தனைகளோடு நீதிமன்றம் விதிக்கும் கூடுதல் நிபந்தனைகளையும் பின்பற்றி மது விற்பனை செய்ய அனுமதித்துள்ளது. 

டாஸ்மாக் கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகள் :
 

  • ஒரு நபருக்கு அதிகபட்சம் இரண்டு பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. 
     
  • ஒருவருக்கு 3 நாள் இடைவெளிவிட்டு வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே  மது விற்பனை செய்ய வேண்டும். ஒரு நபர், தினம்தோறும் மது பாட்டில் வாங்க அனுமதிக்கக்கூடாது.
     
  • பார்கள் முழுவதும் கண்டிப்பாக மூடி இருக்க வேண்டும். அவரவர் இடத்தில் மட்டுமே மது அருந்த அனுமதிக்க வேண்டும்.
     
  • அதிக விலைக்கு மது விற்பனை செய்வதையும், மொத்தமாக விற்பனை செய்வதையும் தடுக்க ஆன்லைன் விற்பனையை ஊக்குவித்து ஆன்லைன் மூலம், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மது வாங்குபவர்களுக்கு, இரண்டு மது பாட்டில்களும், நேரடியாகப் பணம் கொடுத்து மது வாங்குபவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு மேலும் விற்பனை செய்யக்கூடாது.
     
  • ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அந்த வரிசையின் அடிப்படையில் மது விற்பனை செய்ய வேண்டும். 
     
  • மேற்கண்ட நிபந்தனைகளை மீறும் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் அந்தக் கடையைத்  திறக்க அரசு அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 
     

 

சார்ந்த செய்திகள்