
'தற்கொலை எண்ணம் தவறானது'- மன அழுத்தமோ தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட தமிழக சுகாதார சேவை உதவி மையம் 104-ஐ அழைக்கவும்.
சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி, 2021 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் கட் ஆப் மார்க் வராததால் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி, 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.