Skip to main content

ஆசிரியையின் டார்ச்சரால் தனியார்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை...

Published on 13/06/2018 | Edited on 14/06/2018

குத்தாலம் அருகே உள்ள தனியார் பள்ளி ஆசியையின் டார்ச்சரால் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 



 

teacher torture

 

 

 

நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ள பழைய கூடலூரில் ஜி.கே. கல்யாணசுந்தரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. கிராமப்புறத்தில் அப்பள்ளி இயங்கிவந்தாலும் நகரத்தில் உள்ள பள்ளிகளை மிஞ்சும் வகையில் கட்டண கொள்ளையும், நிர்வாக கெடுபிடியும் இருக்கும். சாதாரண ஏழைக் குடும்பத்து பிள்ளைகளோ, நடுநிலை சமுகத்து பிள்ளைகளோ அந்த பள்ளியில் சேர்ந்துவிடமுடியாது. பணத்திலும், கல்வியிலும் உயர்ந்துள்ள சமுகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே படிக்கமுடியும்.

 

 

அதையும் தாண்டி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்ந்துவிட்டால் டார்ச்சர் கொடுத்து வெளியேற்றியிடுவது அந்த பள்ளியின் வழக்கம் என்கிறார்கள் பெற்றோர்கள். அப்படித்தான் அதே கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாளின் மகள் வள்ளி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார், அவர் இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் பொதுமக்களும் மயிலாடுதுறை மருத்துவமனையில் போராட்டம் நடத்திவருகின்றனர். என்ன நடந்தது வள்ளியின் உறவினர்களிடம் விசாரித்தோம், ‘வள்ளி படிப்பில் சுமாராக இருந்தாலும் ஸ்போட்ஸ்ல டாப்பா இருப்பா, கடந்த மூன்று நாட்களாகவே விஜயலெட்சுமி என்கிற ஆசிரியை வள்ளியை சக மாணவிகளுக்கு முன்னாள் மேசை மீது ஏறி நிற்கச் சொல்லி, உடம்ப வளர்க்க நல்லா கொட்டிக்கிறல்ல, புத்திய வளர்க்கவேனாம், எல்லாரும் எப்படி படிக்கிறாங்க, நீ மட்டும் இப்படி மோசமா இருக்கீயே வெட்கமில்லயா என்று திட்டியிருக்கிறார், இதை பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். மறுநாள் வள்ளியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று என்னோட பொண்ணு படிக்கிறது போதும் ஸ்போட்ஸ்ல நல்லா இருக்கா அது போதும்னு சொல்லிவிட்டு வந்துள்ளனர்.
 

 

 

கோபமான ஆசிரியை மறுநாளும் வள்ளியை வழக்கம் போல மேசையில் ஏற்றி அவமான படுத்தியிருக்கிறார். வீட்டிற்கு சென்றது முதல் கண்ணீர் சிந்தியபடி இருந்த வள்ளி வீட்டிலேயே தூக்கு போட்டு இறந்துட்டா.’ என்கின்றனர் பெற்றோர்கள். பள்ளியின் மீது வழக்கு பதியும்வரை உடலை வாங்கமாட்டோம்  என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்