![Chance of rain in the districts adjoining the Western Ghats!](http://image.nakkheeran.in/cdn/farfuture/IXjLnxQyaEGmza68x6REcGlUNDq-FQFkiQtFyzhjvTw/1618727885/sites/default/files/inline-images/00000000_4.jpg)
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி பில்லிமலை எஸ்டேட் பகுதியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் மழை பொழிவதற்கான வானிலை அறிவிப்புகள் ஒருபுறம் வெளியாகி இருந்தாலும் மறுபுறம் வரும் 20ஆம் தேதி முதல் வெப்பநிலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று செல்சியஸ் டிகிரி அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதலாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.