Published on 12/07/2020 | Edited on 13/07/2020
![perambalur](http://image.nakkheeran.in/cdn/farfuture/A8iuaybWvjvkHDBN3epfvdtSQ9SlDoXUWACsxmr6D2I/1594568444/sites/default/files/inline-images/asfgd.jpg)
பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த நபரைக் காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாகத் தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் என்பவரை மீட்க 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கிய நிலையில், தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். அதேவேளையில் மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர்களில் ராஜ்குமார் என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். மீட்கும் பணியில் இறங்கி மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.