இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (11/04/2021) ஒரேநாளில் 6,618 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 6,583 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 35 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் ஒரேநாளில் 2,124 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 88,538 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் மேலும் 22 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை 41,955 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பதிப்பில் இருந்து மேலும் 2,314 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,78,571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக செங்கல்பட்டு- 631, கோவை- 617, திருவள்ளூர்- 296, காஞ்சிபுரம்- 206, தஞ்சை- 178 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.