Skip to main content

கரோனாவால் இறந்தவரின் உடலை எடுத்துச்செல்லும் வழிமுறை, உடலை அடக்கம் செய்யும் வழிமுறை!- தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

கரோனா நோயாளி உடலை எடுத்துச்செல்லும் வழிமுறை மற்றும் அடக்கம் செய்யும் வழிமுறையை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

 


கரோனாவால் இறந்தவரின் உடலை எடுத்துச்செல்லும் வழிமுறை:

அதில் 'கரோனாவால் இறந்தவர் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாக சுற்றி வைக்கவேண்டும். பிளாஸ்டிக் பையின் மேல்புறங்களில் 1% சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இறந்தவர் உடலை கையாளுபவர்கள் சர்ஜிக்கல் மாஸ்க், கையுறை அணிய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

tamilnadu health department released instruction coronavirus

கரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் வழிமுறை:

'கரோனாவால் இறந்தவரின் உடலை தகனம்/ அடக்கம் செய்யும் இடத்தில் மாஸ்க், கையுறை அணிய வேண்டும். இறந்தவர் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால் பணியாளர் முகத்தை மட்டும் திறந்துக் காட்டலாம். பணியாளரைத் தவிர வேறு யாரும் இறந்தவர் உடலை கையாள அனுமதிக்க வேண்டாம். இறந்தவர் உடலைத் தொட தேவையில்லாத மதசம்பந்தமான சடங்குகளை செய்ய அனுமதிக்கலாம். இறந்தவர் உடலை குளிப்பாட்டுதல், கட்டியணைத்தல் முத்தமிடுதல் போன்றவற்றை செய்ய அனுமதி இல்லை. தகனம்/ அடக்கம் செய்யும் இடத்தில் உள்ள பணியாளர்கள், குடும்பத்தினர் சுகாதார முறையை பின்பற்றுவது கட்டாயம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்