தமிழ்நாட்டில் இன்று (07.01.2024) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள வட கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (08.01.2024) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் என பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும் என பெய்யும்.
விருதுநகர் மாவட்டம் மற்றும் நெல்லை, மாஞ்சோலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும். சராசரியாக 15 சென்டிமீட்டர் அளவில் மிக கனமழையின் போது 25 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்' என தெரிவித்துள்ளார்.