Skip to main content

'ரேஷனில் நாளையும் கரோனா நிவாரண நிதி பெறலாம்' - தமிழக அரசு!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

coronavirus lockdown funds tamilnadu government announced

 

கரோனா நிவாரண நிதி தொடர்பாக தமிழக அரசு இன்று (15/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "16/05/2021, 23/05/2021 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே 16/05/2021 அன்று முதல் தவணையாக கரோனா நிவாரணத் தொகை ரூபாய் 2,000 வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, 16/05/2021 அன்று நிவாரண உதவிப் பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைத்தாரர்கள் மட்டும், ரூபாய் 2,000 கரோனா நிவாரணத் தொகையை 16/05/2021 அன்று காலை 08.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கேரளாவின் மோசமான நிதி  நிர்வாகமே காரணம்' - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு 

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

மாநிலங்கள் வாங்கக் கூடிய கடன் தொகைக்கு மத்திய அரசு உச்சவரம்பு விதித்துள்ளதாக கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, ‘கடன் வாங்கும் வரம்புகளை மத்திய அரசு குறைப்பது என்பது மாநிலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், நீண்ட கால பொருளாதாரத்தில் சேதத்தை ஏற்படுத்தும். இது குறுகிய காலத்திலோ அல்லது நடுத்தர காலத்திலோ கூட சரிசெய்ய முடியாததாக இருக்கும். கேரள மாநிலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசுக்கு உடனடியாக சுமார் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலையில், மாநில அரசு கடன் திரட்ட மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. 

அரசியலமைப்பு சட்டம், மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகளாக மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டை தயாரித்து நிர்வகிப்பதற்கு இந்த அதிகாரங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மாநிலத்தின் கடனை தீர்மானிப்பதற்கும் மாநிலங்களுக்கு உட்பட்டது. மேலும், தேவையான அளவிற்கு மாநிலம் கடன் வாங்காவிட்டால், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான மாநிலத் திட்டங்களை மாநிலத்தால் முடிக்க முடியாது.

Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகம், கேரளா மீது நிகரக் கடன் வாங்கும் உச்சவரம்பை விதித்துள்ளது. இதன் மூலம், பொது சந்தையில் கடன் திரட்டுவது உள்பட அனைத்து வழிகளில் இருந்தும் கடன் திரட்டுவதை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தனது நிதி விவகாரங்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது' என்று தெரிவிக்கப்பட்டது.  

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விசுவநாதன் அமர்வு முன் வந்தது. அப்போது, இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் (05-02-24) அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'கேரளா மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு அந்த அரசின் மோசமான நிதி நிர்வாகமே காரணம். இந்த நிலையில் தான், கேரளா அரசு சார்பில் கடன் வாங்கும் வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருக்கிறது. கேரளா அரசு, மாநில அரசின் உற்பத்தி திட்டங்கள், நலத்திட்டங்களுக்காக கடன் வாங்கவில்லை. மணிலா அரசு ஊழியர்களின் ஊதியம், பென்ஷன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கு கடன் வாங்க முயற்சிக்கிறது.

இதனையடுத்து, கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசு, கேரளா ஆளுநர் கண்டித்து நாளை (08-02-24) டெல்லியில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயனின் இந்த போராட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'வெளியே வரமாட்டோம்...' -ஊரடங்கு முடிந்தும் வீட்டை விட்டு வெளியே வராத குடும்பத்தினர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Shocking incident in Kumari where the family did not come out of the house even after the corona lockdown

 

வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிற்கு பிறகும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசித்து வருபவர் பேசியஸ் அலெக்சாண்டர்-மாலதி தம்பதியினர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் தந்தையான அலெக்சாண்டர் குடும்பத்தாரை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்தது.

 

புகாரை அடுத்து சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின் வெளிப்பக்க கேட் உள்பக்கமாக பூட்டிய நிலையில் அதை திறக்க வலியுறுத்தியும் யாரும் திறக்கவில்லை. இதனால் எகிறி குதித்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டிய வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் பேச்சு கொடுத்தனர். அப்பொழுது பெர்சியஸ் அலெக்சாண்டரின் மனைவி மாலதி 'எங்க எல்லோருக்கும் கொரோனா வந்து இருக்குன்னு கொண்டு போகணும் அவ்வளவு தானே உங்களது திட்டம்' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய மாலதி தங்களுக்கு சொந்தமான கடையில் இருந்து கொண்டு வாடகை தராமல் ஒரு நபர் தங்களை கொல்ல முயற்சிப்பதாகவும், அவரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தங்களை தாக்குவதற்கு சிலர் மறைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் வீட்டுக்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அப்பொழுது தீயணைப்பு அதிகாரி ஒருவர் பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைக்கு முன்பாக பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்களே' என கேட்டதற்கு 'ஆமாம் அதைத்தான் இங்கே செய்து கொண்டிருக்கிறோம்' என்றார் பெர்சியஸ். இப்படி எந்தவிதத்திலும் பிடிகொடுக்காமலும் சரியான காரணத்தை சொல்லாமலும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.