உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரான திட்டமிட்ட அரசியல் சதி என்றும், மத்திய அரசின் நெருக்கடிக்கு தமிழக அரசு அடிபணிந்து 10% இட ஒதுக்கீடு என்ற வரலாற்று பிழையை செய்து விட வேண்டாம் என கோரிக்கை.
திருமாவளவனின் கருத்துக்கு பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு. இதனால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பதிக்காத வகையில், உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கலாம் என தெரிவித்தன. புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, 10%இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்தார்.