இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
![Tamilnadu corona virus updates - minister vijayabaskar press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/yq3phRB2S--dwD1vFPuaEL2Oqr4Qv1ODe_eAgIvCOhY/1587215343/sites/default/files/inline-images/1111111_97_2.jpg)
பின்னர் இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, தமிழகத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 283 லிருந்து 365 ஆக உயர்ந்துள்ளது என்றார். மேலும் வளர்ந்த நாடுகளைவிட தமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்பு பணி நடைபெறுகிறது என்று கூறிய அவர் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது மகிழ்ச்சியான தகவல் என்றும் தெரிவித்தார்.