இந்த ஆண்டுக்கான முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ‘2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை (19-02-24) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், தமிழ்நாடு பட்ஜெட் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இடம் பெறப்போகும் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு கூறியதாவது, ‘சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடு ஆகிய 7 முக்கிய அம்சங்கள் பட்ஜெட் இடம்பெறும்’ என்று தெரிவித்துள்ளது.