Published on 23/08/2018 | Edited on 23/08/2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் ஆகஸ்ட் 23, 24-ம் தேதிகளில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் நிதிஷ் நாயக், ஜி.சி.கில்னானி ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.