Skip to main content

“அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் விரைவில் அறிவிப்பார்” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 04/03/2025 | Edited on 04/03/2025

 

CM will announce a retirement scheme for civil servants soon I Periyasamy

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று   விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். இதில் மாவட்ட கலெக்டர் சரவணன்  முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் திலகவதி உட்பட அதிகாரிகள்  கலந்து கொண்டனர். இதில் வேளாண்துறை, ஊரக வளர்ச்சித்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை  தோட்டக்கலைத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட ஆறு துறைகள் சார்பில்  257 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரத்து 885 மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நகர் ஊரமைப்பு  துறை சார்பில் ரூ. 4¾ கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு  அலுவலகத்தை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட  பாதிப்பை சேம நிதியிலிருந்து முதலமைச்சர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  400 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி உள்ளார்.  அதேபோல்  மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் 100 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டு உள்ளவர்களுக்கு  தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இன்று மட்டும்  ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

CM will announce a retirement scheme for civil servants soon I Periyasamy

2023ல் ஏற்பட்ட  பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காலத்திலும் இப்படி வழங்கப்படவில்லை. இந்த அரசுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். மிகச் சிறப்பாக திட்டங்கள் நிறைவேற்றி வருகிறார்” என்றார். 

இதையடுத்து, அரசு ஊழியர்கள்  ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு வருடமாக பழைய பென்ஷன் திட்டத்தை   நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்த கேள்விக்கு:-  தமிழக அரசு மீது அரசு  ஊழியர்கள் ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.  அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள் நம் முதல்வர் மீதும். ஆட்சி மீதும் நம்பிக்கை  வைத்துள்ளனர்.   அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வூதிய திட்டத்தை  முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று கூறினார்.

இதில் ஆத்தூர்  நடராஜன், முன்னாள் சேர்மன் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் ஒன்றிய  செயலாளர்களான நெடுஞ்செழியன், வெள்ளிமலை, செய்தி மக்கள் தொடர்பு  அதிகாரி ஜெயவீரபாண்டியன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து  கொண்டனர்.

சார்ந்த செய்திகள்