![Tamil Nadu cricketer new record!](http://image.nakkheeran.in/cdn/farfuture/gffivW3QMYuRoT3RVZj3uvz-DLX3oU0-Ed9Gh3_kzuo/1669010255/sites/default/files/inline-images/vijay434434.jpg)
இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடர்ந்து ஐந்து சதங்களை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சலப்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐந்தாவது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த ஜெகதீசன் 114 பந்துகளில் தனது இரட்டைசதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளார்.
இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககரா, இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர்.
ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.