Published on 13/02/2021 | Edited on 13/02/2021

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. பின்னர் சட்டப்பேரவைக் கூட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (13.02.2021) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட உள்ளது. இடைக்கால பட்ஜெட் குறித்து நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.