உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில், சென்னை முதலிடமும் வகிப்பதாகவும், இதில் தமிழகத்தில் திருச்சியில் இருந்து தான் அதிக அளவில் குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் பரபரப்பாக தகவல் வெளியானது.
அமெரிக்காவிலிருந்து ஒரு அறிக்கை மத்திய உள்துறைக்கு வந்தது இதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்க. தமிழகத்தில் குழந்தை ஆபாசப்படம் பார்ப்பவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்யும் ஆட்களின் பட்டியலை மத்திய உள்துறையிடமிருந்து மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காகத் தேடியவர் எந்த வேலையும் கிடைக்காமல் நாகர்கோவிலில் உள்ள ஒரு விடுதியில் துப்புறவு பணியாளராக வேலை செய்தவர். கடந்த மாதம் வேலைவிட்டு மீண்டும் திருச்சிக்கு வந்தார்.
திருச்சியில் வேலை தேடிக்கொண்டிருந்தவர் தற்போது பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும், அதனை தனது நண்பர்கள் உள்பட பலருக்கும் பகிர்ந்து வந்துள்ளார். இதில் மெசன்ஜர் மூலம் ஒரு குழுவை தயார் படுத்தி அதில் 300- க்கும் மேற்பட்ட நபர்களை குழுவில் இணைத்து. அவர்களுக்கு தொடர்ச்சியாக தான் பார்த்து ரசித்த சிறுவர் ஆபாச வீடியோக்கள் மற்றும், புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த குழுவில் பெரும்பாலும் சென்னையே சேர்ந்தவர்கள் இருப்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தனது அடையாளத்தை மாற்றி, பல்வேறு புனை பெயர்களை பயன்படுத்தியுள்ளார். அதில் நிலவன், ஆதவன், வளவன் ஆகிய பெயர்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டுருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு இடையில் குழந்தைகள் ஆபாச வீடியோ படங்களை பார்ப்பதும், அதை பதிவேற்றம் செய்யவதும் சட்டப்படி குற்றம் என்று போலீஸ் பொது அறிவிப்பு வெளியிட்ட பின்னரும் தொடர்ச்சியாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் குழந்தைகள் ஆபாசப்படத்தை அவர் நடத்தும் மெசேன்ஜர் குழுவில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். இதன் பிறகு இதை கண்காணித்த
இதுதொடர்பாக சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி வந்த கிறிஸ்டோர் அல்போன்சை கையும் களவுமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் அண்ணன் பாபு பாலியல் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போனார் என்பது குறிப்பிடதக்கது.
போலீஸாரின் விசாரணையில் கிறிஸ்டோபர் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டு அதற்கே அடிமையாகி அதிலிருந்து மீள முடியவில்லை என்றும், இதனாலே குழந்தைகள் வீடியோக்களை பார்த்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். இவரை கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளார்கள். இந்த குற்றம் நிரூக்கப்பபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சட்டவல்லூனர்கள்.
சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுமார் 3,000- க்கும் அதிகமானோர் போலி கணக்குகளில் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதில் திருச்சியில் மட்டும் 60 பேர் ஆபாச படங்களை வெளியிட்டு இருப்பதும், தற்போது 1 வரை கைது செய்து இருப்பதும் மற்ற 59 பேர் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்பதே தற்போது திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.