!['Tamil Nadu boats auction ...' - MK Stalin's letter to the Prime Minister](http://image.nakkheeran.in/cdn/farfuture/u0H5fciytie4rJeIgDbFkU-k03jgLKTiicCCuxBfGbY/1644244621/sites/default/files/inline-images/oo_3.jpg)
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகப் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணி இன்று (07/02/2022) முதல் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் என இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, காரைநகரில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 65 விசைப்படகுகளை ஏலம் விடும் பணித் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் 'இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக எவ்வித ஆலோசனையுமின்றி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதில் பிரதமர் உடனடியாக தலையிட்டுத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.