தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சுவாமி சங்கரதாஸ் அணி இடையே போட்டி நடைபெறுகிறது.
இன்று நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பிறகு நடிகை குஷ்பூ செய்தியாளகர்ளை சந்தித்தார் அப்போது, 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் எல்லா நடிகர்கள், நடிகைகள் வெளியூரில் இருந்தாலும் அவர்கள் இங்கே வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று ஈவினிங் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே ரொம்ப தூரம் கிடையாது. நூறு சதவீத வாக்குபதிவு என்பது சாத்தியமில்லை எம்பி எலெக்சன், எம்எல்ஏ எலக்சனிலேயே 56% தான் ஓட்டு போட்டோம்.
நாட்டுக்காக வாக்கு கேட்டால் 56 சதவீதம் பேர் தான் வருகிறார்கள். ஆனால் நாங்கள் இந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவு என்று சொல்லி இருக்கிறோம். தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள். வாக்களிப்பு சரியாக நடைபெறும் எனக்கூறினார்.