சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி அட்டகாசம் செய்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று பொங்கல் விழா நடைபெறுவதால் மாணவ மாணவிகள் காலை 10 மணிக்கு கல்லூரி விழாவுக்கு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் சில மாணவர்கள் தாமதமாக வந்தனர். இதனால் கல்லூரின் நுழைவுவாயில் மூடப்பட்டது. இதனால் தாமதமாக வந்த கல்லூரி மாணவர்கள் கீழ்ப்பாக்கம் சாலையில் சென்ற '15 பி' என்ற அரசு பேருந்து மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தின் மீது ஏறி அட்டகாசம் செய்ததோடு சாலையில் இடையூறு செய்தபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக கல்லூரி மாணவர்களை நெறிப்படுத்த முயன்ற பொழுதிலும் கட்டுப்படாமல் மாணவர்கள் சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.