காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைIPLபோட்டியை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களை திரட்டி முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,
தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்பிற்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும் மோடி அரசாங்கம் கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்க்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்கப் பார்க்கிறது.
உடைகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கப் பார்க்கிறது. கருத்து பறிமாற்றம் என்ற பெயரில் விவாதங்களில் அவதூறு பிச்சாரங்களில் பாஜக ஈடுபடுகிறது. மிரட்டுவதும், அச்சுறுத்தியும் வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை ஏற்றுக் கொள்ளாத பாஜக பிளவுபடுத்தப் பார்க்கிறது..
இதனை கண்டித்தும் உடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டு அதனை அமைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டமும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் பங்கேற்க திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆதனை ஏற்று விவசாயிகள் முழுமையாக அனைத்து போராட்டங்களிலும் ஒன்றுபட்டு கலமிறங்க வேண்டும்.
திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி போராட்டத்திற்கு தமிழகத்தின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு பா.ம.க தானே முன்வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது வரவேற்கதக்கது. அனைத்து கட்சிகளுக்கும் எதிர்கட்சி தலைவர் அழைப்பு விடுத்து ஒன்றிணைக்க வேண்டுகிறேன்.
மாணவர்கள், இளைஞர்கள். முழுமையாக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் அகிம்சை வழியில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும். காவிரி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபவதை திசை திருப்பும் உள்நோக்கத்தோடு சென்னை IPL கிரிக்கெட் போட்டியை நடத்த பாஜக சதி செய்கிறது இதனை ஒத்தி வைக்க வேண்டும்.
தமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைIPLபோட்டியை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களை திரட்டி முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்றார்.