சபரிமலையில் சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் பக்தா்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேவசம் மந்திரி கடகப்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழையால் சபரிமலை பம்பை ஆற்றில் கரைபுரண்டு ஒடிய வெள்ளத்தால் திருவேணி பம்பை நடைபாலம் மணல் மேடுகளால் சூழப்பட்டது. இதனால் ராணுவத்தை கொண்டு இரண்டு தற்காலிக பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தை சூழ்ந்த மணல் மேடுகளை அப்புறப்படுத்தும் பணி சிலநாட்களாக நடந்து வந்த நிலையில் பாலம் முமுமையாக கண்டெடுக்கப்பட்டது.
ஓரௌவு சேதத்துடன் காணப்படும் அந்த பாலத்தின் பக்கவாட்டுகளில் கல், மணல், ஜல்லிகளை அடுக்கி வைத்து பாலம் நேற்றில் இருந்து பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. மேலும் ஆற்றின் சேதமடைந்த படிகட்டுகளையும் ஓரிருநாளில் சீரமைத்து முடிக்கப்படும்.
மேலும் பம்பையில் இருந்து கணபதி கோவில் வரை செல்லும் நடைபாதை சரி செய்யப்பட்டு கடந்த ஆண்டு பக்தா்கள் எவ்வளவு விசாலமாக நடந்து சென்றார்களோ அதை போன்ற பாதை ஏற்படுத்தி கொடுக்கப்படும். குறுகியலவிலான பாதையில் தான் பக்தா்கள் நடந்து செல்ல வேண்டும் இதனால் நெருக்கடிகள் கடுமையாக இருக்கும். அது போல் குறிப்பிட்ட இடங்களில் தான் பக்தா்கள் அனுமதிப்பார்கள் என்ற வதந்தியை யாரோ சிலா் பரப்பி வருகிறார்கள் அதை பக்தா்கள் நம்ப வேண்டாம்.
இனி பம்பை ஆற்றின் கரையில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதே போல் இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தா்களை இறக்கி விட வாகனங்களை பம்பை வரை அனுமதிக்கவா அல்லது நிலக்கல்லில் நிறுத்தி விட்டு அங்கிருந்து அரசு பேருந்துகளில் அனுமதிக்கவா என்று தேவசம் போட்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு அதன் முடிவை பின்னா் அறிவிக்கப்படும் என்றார்.