புதுக்கோட்டை நகராட்சியில் பேருந்து நிலையம் முதல் மதுரை சாலை இணைப்பு வரை மகளிர் கல்லூரி சாலை சமீபத்தில் சாலை சீரமைக்கப்பட்டது. அந்தப் பக்கத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. சீரமைக்கப்பட்ட சாலையின் நடுவில் தெரு விளக்கு கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது.
மாற்றப்பட்டுள்ள தெரு விளக்கு கம்பங்களி்ல விளக்குகளை தாங்கி பிடிக்கும் குழாய்கள் இரட்டை இலை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு அதற்கு பச்சை நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அ.தி.மு.க வின் சின்னமான இரட்டை இலை சின்னம் தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு தி.மு.க மா.செ (பொ) கே.கே.செல்லப்பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் நகராட்சி நிதியில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அந்த சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அவருடன் எம்.எம்.பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
இது இரட்டை இலை இல்லை என்று சொல்ல பறக்கும் குதிரை போல வேறு என்ன காரணம் சொல்லப் போறாங்களோ..
நகராட்சி தரப்பிலோ.. நாங்களா இதை அமைச்சோம். அமைச்சர் தங்கமணி ஆட்கள் ஒப்பந்தம் எடுத்து செய்றோம்னு வந்து கம்பத்தை நட்டுட்டு செக் வாங்கிட்டு போறாங்க. அவங்க செய்றதுக்கெல்லாம் அதிகாரிகள் நாங்க சிக்க வேண்டியிருக்கு என்கின்றனர்.