Published on 12/12/2020 | Edited on 12/12/2020
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.கவினருடன் காணொலி வாயிலாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,
'மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் பேசியுள்ளார். ஏழைகளைக் காக்கக் கூடியவர்கள்தான் உண்மையிலேயே ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். சிலர் ஆன்மிகத்தைக் காரணம் காட்டி, தி.மு.கவை வீழ்த்தலாம் என எண்ணுகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் கமிஷனுக்கு மட்டுமே பணிகள் நடக்கிறது. ஊர் ஊராகச் சென்று, அரசு விழாக்களில் அரசியல் பேசி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி' என்றார்.