ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அது தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த கணினி பொறியாளரான தினேஷ்குமார் 80 மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விவரங்களை ஸ்மார்ட் போன் ஆப் மூலம் தெரிந்துகொண்டு பெண்களை ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.
அண்மையில் சொந்தகாரர் வீட்டிற்கு சென்ற தினேஷிடம் சொந்தகார பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து தரும்படி கேட்டு போனை நம்பி கொடுத்துள்ளார். அப்போது அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தினேஷ் அந்த மொபைலில் ஒரு ஹேக்கிங் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து தனது மொபைல் மூலம் அந்த பெண் மொபைலுக்கு வரும் போட்டோக்கள், விடியோக்கள், அலைப்பேச்சு பதிவுகள் போன்றவற்றை திருடி அதை லேப்டாப்பில் ஏற்றி அந்த பெண்ணிடம் தன் ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளான். இதைப்பற்றி தனது சகோதரனிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் போன்றே அவரது சகோதரன் தினேஷ்ற்கு குறுந்செய்தி அனுப்பி ஒரு இடத்தை குறிப்பிட்டு அந்த இடத்தில் யாரும் இல்லை நடமாட்டம் இருக்காது அங்கே வா என்று கூறியுள்ளார். அதனை நம்பி சென்ற தினேஷை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனை அடுத்து அவனது வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 2 லேப்டாப், மூன்று ஸ்மார்ட் போன், பல பெண்களின் ஆடைகளை கைப்பற்றினர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தினேஷ் ஏற்கனவே ஒரு தனியார் கல்லூரியில் கணினி ஆய்வகத்தில் உதவியாளராக பணியாற்றும் பொழுது கல்லூரி மாணவிகளின் அந்தரங்க விவரங்களை இதேபோல் கைப்பற்றி அவர்களை ஆசைக்கு இணங்கும்படி தொந்தரவு செய்ய தர்ம அடி கொடுத்து துரத்தியுள்ளனர்.
அதன்பிறகும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களது உடைகளையும் சேகரித்துவைத்துள்ளான் அந்த ஸ்மார்ட் போன் சைக்கோ. அதைவிட கொடூரம் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகபேர் சொந்தகார பெண்கள், சகோதர உறவுமுறை பெண்கள், நம்பி பழகிய தோழிகள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை... ஸ்மார்ட் போன்களை மூன்றாம் நபரிடம் மட்டுலமல்ல நமக்கு தெரிந்த உறவுக்காரர்களிடம் கூட கொடுப்பதை பெண்கள்தவிர்க்க வேண்டும்.