Skip to main content

நீதிமன்றத்திற்கு வந்தவர் சரமாரியாக வெட்டிக்கொலை.. பட்டப்பகலில் பயங்கரம்...

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

சிவகங்கையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

sivangangai incident

 

 

சிவகங்கை மாவட்டம் பனங்காடியை சேர்ந்தவர் ராஜசேகரன் (38). இவர் தனது நண்பருடன் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது ஒரு கும்பல் அவர்களை ஆயுதங்களோடு வழிமறித்துள்ளது.

அவர்களிடம் இருந்து தப்பியோடிய ராஜசேகரனை, சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அந்த கும்பல் தப்பியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

2013-செப்டர்பர் 18-ந்தேதி பனங்காடியை சேர்ந்த வெங்கடேசன், இளையராஜா ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலையில் ராஜசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே, பழி தீர்க்கும் வகையில், 6 ஆண்டுகள் கழித்து ராஜசேகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்