![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/BaURz-09tRGskLUOLwsGZ_vjl53YUL2ZL94S0DZB0Rs/1549419936/sites/default/files/inline-images/Svg%20Ajith%20Raja.jpg)
மாணவர்களுக்கிடையே நடந்த முன்பகை காரணமாக கல்லூரிக்குள்ளேயே அரிவாளால் வெட்டப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார் மாணவர் ஒருவர்.
சிவகங்கை மாவட்டம் பில்லூரை சேர்ந்தவர் அஜித் ராஜா. இவர் சிவகங்கையிலுள்ள மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டாமாண்டு தாவரவியல் மாணவர். வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த பொழுது, கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அடையாளம் தெரியாத மூன்று நபர் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தி தப்பியோடிவிட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையும் மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது. அதில், " போதைப் பழக்கத்திற்கு அடிமையான வெட்டுப்பட்ட மாணவன் அஜித் ராஜா குழுவிற்கும், மற்றொரு மாணவர் குழுவிற்கும் நாட்பட்ட முன்பகை இருந்து வந்ததாகவும், முந்தைய தினம் அந்த குழுவினரிடம் இவர் மிரட்டி விட்டு வந்ததாகவும், அதனின் எதிரொலியாக இச்சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவிக்கின்றது." காவல்துறையின் முதற்கட்ட தகவல். எனினும் இச்சம்பவத்தால் மாணக்கர்கள் மத்தியில் பதட்டம் நிலவி வருகின்றது.