Published on 16/11/2019 | Edited on 16/11/2019
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, வேண்டும் என்றே ராமதாஸ் அவதூறு பரப்புகிறார். ராமதாஸ் மட்டும் இதை நிரூபித்தால், நான் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதன்பின் இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முரசொலியின் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் என்பதால் அவருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சாஸ்திரி பவனில் வருகின்ற 19ஆம் தேதி பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்துகிறார்.