Skip to main content
Breaking News
Breaking

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் இன்று நல்லடக்கம்

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

singer sp balasubramanyam  chennai

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

 

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் இன்று (26/09/2020) காலை 11.00 மணிக்கு எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

 

இதனிடையே, பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி.யின் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார். 

 

எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள பண்ணை வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்