Skip to main content

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

The SI who used the two-wheeler seized in the accident for 4 years was dismissed

 

விபத்து வாகனத்தை கைப்பற்றி உரிமையாளருக்கு தெரியாமலேயே நான்காண்டுகளாக பயன்படுத்தி வந்த உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கப்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவருடைய இருசக்கர வாகனம் கடந்த 2018 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான அந்த இருசக்கர வாகனத்தை சித்தாமூர் காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் திடீரென அந்த வாகனம் காணாமல் போய்விட்டதாக காவல்துறையினர் தரப்பில் சிவபாலனிடம் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், இறுதியில் புலனாய்வு பிரிவு எஸ்.ஐ பக்தவச்சலம் என்பவர் நம்பர் பிளேட்டை மட்டும் மாற்றி அந்த இருசக்கர வாகனத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் சூடு பிடித்து தற்பொழுது சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில், தாம் மாட்டிக் கொள்வோம் என நினைத்த பக்தவச்சலம், இது கண்டுபிடிக்கப்பட்ட இருசக்கர வாகனம் என்று அடையாளப்படுத்தினார்.

 

ஆனால், நான்காண்டுகளாக அவர் அந்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்தது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி காவல் ஆய்வாளர் பக்தவச்சலத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்