Skip to main content

ஊத்தங்கரையில் சங்கரன் உடல்...

Published on 12/10/2018 | Edited on 12/10/2018

 

சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார்.  அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு அவரது உடல் கொண்டுசெல்லப் பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமியிடம் பாலியல் சீண்டல்- இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு! 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

puducherry school children incident police investigation

 

புதுச்சேரி மாநிலம், துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்குச் சொந்தமான மைதானங்கள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்த தடைகள் நீக்கப்பட்டு இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

 

மைதானம் மூடப்பட்டபோது முத்தரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

உடனே பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்கள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என கூறியுள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது. 

 

இதையடுத்து சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி சிறுமியிடம் பயிற்சியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதன் மீது கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காததும் உறுதியானது. 

 

இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சிவசாமி  மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவானவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

 

இதில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோஹித் பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது  குறிப்பிடத்தக்கது.

 

Next Story

''எனக்கு எண்டே கிடையாது; ஆனால் அந்த பக்கமே செல்லமாட்டேன்''-நடிகர் வடிவேலு

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

"I have no end; but I will not go that way" - Actor Vadivelu

 

இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையை அடுத்து நடிகர் வடிவேலு நடிக்க ரெட் கார்டு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், ''என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது. இதுபோன்ற துன்பத்தை யாரும் சந்தித்திருக்க முடியாது. கரோனாவுக்கு முன் எனது பிரச்சனை எல்லாம் சாதாரணமாக சென்றுவிட்டது. மக்களை இன்னும் சந்தோசமாக சிரிக்க வைத்துவிட்டுதான்  இந்த உயிர் இந்த பூமியை விட்டு செல்லும். நண்பன் விவேக் மறைவு நாட்டிற்கும், திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. விவேக்கின் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாள் முதல் எனக்கு பிரகாசமான சூழல் அமைந்துள்ளது. தற்பொழுது எல்லாம் நன்றாகவே நடந்து வருகிறது'' என்றார்.

 

அதேபோல் தொடர்ந்து நடிப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அவரது பாணியில் ''எனக்கு எண்டே கிடையாது. இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன்'' என்றார்.