![Schools holiday in 5 districts today](http://image.nakkheeran.in/cdn/farfuture/pFw8FuqtQ9EqyFBO-G_UkNDJJ7VcmBo6h4vqrGEahFw/1670896550/sites/default/files/inline-images/b34_6.jpg)
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கள்ளக்குறிச்சியுடன் சேர்த்து ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று காலை 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மதியம் 2000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தற்போது 3000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.