Skip to main content

ஈரோடு: பத்து கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் - படங்கள்

Published on 16/08/2018 | Edited on 27/08/2018
Flood


கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி நீர் மேட்டுர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அது அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பவானி சாகர் அணை நிரம்பி உபரி நீராக 50 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டுள்ளது. பவானி ஆறும், காவிரி ஆறும் கலக்கிற ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் இருந்து மொத்தமாக இரண்டரை லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் பாய்ந்து செல்கிறது. இதனால் பவானி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் கடுமையாக ஏற்பட்டுள்ளது. 
 

 

 

சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமம் பவானி நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அதேபோல் பவானியில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாராபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் ஓடுகிறது. 
 

 

 

கொடுமுடி அருகே உள்ள காசிபாளையம், ஓஞ்சலூர் என பத்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. ஈரோடு பள்ளிபாளையத்தை இணைக்கும் பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கர்நாடகாவில் மழைபொழிவு அதிகமாக உள்ளதால் மேலும் வெள்ள நீர் கூடுதலாக வரும் என்ற அபாயம் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்