Skip to main content

சிறைக்கு முன் சபதம்... கண் கலங்கிய சசிகலா! (படங்கள்)

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று (16.10.2021) மரியாதை செலுத்தினார்.

 

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில், அவருக்குத் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் சென்ற சசிகலா அங்கு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியபோது  அவரது கண்கள் கலங்கின.

 

ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்ததோடு நினைவிடத்தை மூன்றுமுறை அடித்து சத்தியமும் செய்திருந்தார். அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிவித்திருந்த சசிகலா, அண்மைக்காலமாக அதிமுகவை மீட்கப்போவதாக அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஃபோனில் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

udanpirape

 

 

 

சார்ந்த செய்திகள்