Published on 08/11/2018 | Edited on 08/11/2018

சர்கார் படத்திற்கு எதிராக மதுரையில் அப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ராஜன் செல்லப்பா, படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் அருகே மன்னார்குடியில் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்,
இலவசம் வேண்டாம் என்று மக்கள்தான் கூற வேண்டும். காசுக்காக நடிப்பவர், தயாரிப்பவர் சொல்ல அருகதை இல்லை. ஜெயலலிதாவையும், அவரது நலத்திட்டங்களையும் கொச்சைப்படுத்து பேசியுள்ளனர் என்று கூறினார்.