Skip to main content

''சரவணா ஸ்டோர்ஸ்" தலைவர் 1 கோடி நிவாரண நிதி;தமிழக மக்களுக்கு வேண்டுகொள்!!

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
Saravana Stores "head 1 crore relief fund!

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக லெஜண்ட் சரவணன் ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கினார். 

 

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,

இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம், நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை. மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றிபெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை தகவல்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

 Freezing of Saravana Store Company's assets-Enforcement Information

 

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் 'சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ்' நிறுவன சொத்துக்கள் முடக்கப்படுவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

 

சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸின் ரூபாய் 66.93 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 234.75 கோடி மதிப்புடைய சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு கமர்சியல் ஷோரூம் ஒன்றை கட்டுவதற்காக இந்தியன் வங்கியில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் 150 கோடி ரூபாய், அதன்பின் 90 கோடி ரூபாயை கடனாகப் பெற்றதாகவும் ஆனால் அந்தக் கடன் தொகையை அவர்கள் வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 

 

Next Story

''1000 கோடி ரூபாய் மறைப்பு...'' சரவணா ஸ்டோர்ஸ் ஐ.டி ரெய்டில் அம்பலம்!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

'' 1000 crore rupees cover ... '' Saravana Stores IT raid exposed!

 

கடந்த ஒன்றாம் தேதி சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் விற்பனையைக் குறைத்து காட்டியுள்ளதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் கடைகளை நடத்திவரும் சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனம் மீது வருமானவரித்துறையினருக்குப் புகார் வந்ததையடுத்து கடந்த 1 ஆம் தேதி முதல் மொத்தம் 37 இடங்களில் சோதனை நடைபெற்றது.

 

நடத்தப்பட்ட சோதனையில் விற்பனை விவரங்கள் சரியாக பதிவு செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை விவரங்களை மறைத்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத அந்த தொகையின் மூலம் பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளனர். கணக்கில் காட்டாமல் தங்கத்தையும் வாங்கியுள்ளனர். இரண்டு நிறுவனங்களிலிருந்தும் 10 கோடி ரூபாய் பணம், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.