![salem ramesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/utUd1grZIWYfdf_te5n_McPUi2_FvMpdwU3AQiV-frc/1592619081/sites/default/files/inline-images/salem%20ramesh.jpg)
அ.தி.மு.க. பெண் பிரமுகரைக் கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி சாந்தா (50). அ.தி.மு.க. கட்சியில் பனமரத்துப்பட்டி ஒன்றிய மகளிர் அணித் தலைவராக இருந்தார்.
கடந்த மே 20ஆம் தேதி மாலை, அப்பகுதியில் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ரமேஷ் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக ஏற்கனவே மல்லூர் காவல்நிலையத்தில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை எஸ்.பி. தீபா கனிகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ராமன், ரவுடி ரமேஷை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ரமேஷ் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, குண்டாஸ் கைது ஆணை காவல்துறையினர் சார்வு செய்தனர்.