Published on 13/10/2020 | Edited on 13/10/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது.
இன்று (13/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,102 கனஅடியில் இருந்து 27,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.90 அடியாகவும், நீர் இருப்பு 64.71 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு வினாடிக்கு 14,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 26,500 கனஅடியிலிருந்து 20,000 கனஅடியாகச் சரிந்துள்ளது.